search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்லி ஐகோர்ட்டில் மனு"

    மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இழிவுபடுத்தும் இணையதள தொடரை நீக்கக்கோரி டெல்லி ஐகோர்ட்டில் ஷசாங்க் கார்க் என்ற வக்கீல் மனு தாக்கல் செய்துள்ளார். #RajivGandhi #SacredGames
    புதுடெல்லி:

    ‘நெட்பிளிக்ஸ்’ இணையதளத்தில், ‘சாக்ரட் கேம்ஸ்’ என்ற புதிய தொடர் இடம் பெற்று வருகிறது. பிரபல இந்தி நடிகர்கள் சயீப் அலிகான், நவாசுதின் சித்திக் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த தொடரின் சில காட்சிகளும், வசனங்களும் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை இழிவுபடுத்தும்வகையில் இருப்பதாக டெல்லி ஐகோர்ட்டில் ஷசாங்க் கார்க் என்ற வக்கீல் மனு தாக்கல் செய்துள்ளார்.

    அதில், “போபர்ஸ் வழக்கு, ஷா பானோ வழக்கு, பாபர் மசூதி வழக்கு போன்ற வரலாற்று சம்பவங்களை இந்த தொடர் தவறாக குறிப்பிடுகிறது. ராஜீவ் காந்தியையும், அவரது குடும்பத்தையும் நேரடியாகவோ, மறைமுகமாகவோ குறிப்பிடும் காட்சிகளையும், வசனங்களையும் நீக்குமாறு நெட்பிளிக்ஸ் நிறுவனத்துக்கும், தொடரின் தயாரிப்பாளருக்கும் உத்தரவிட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது. இம்மனு, நேற்று தலைமை நீதிபதி (பொறுப்பு) கீதா மிட்டல், நீதிபதி ஹரிசங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு பட்டியலிடப்பட்டது. ஆனால், கீதா மிட்டல் விலகிக் கொண்ட தால், வேறு அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.  #RajivGandhi #SacredGames #tamilnews 
    ×